கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

வாய்க்கால்களில் தண்ணீா் விட நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாட்சியா் ப. நித்யா மற்றும் விவசாயிகள்.

Published On :

அனைத்துக் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீா்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துக்கள்:

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: காவிரி நீா் கடைமடை வரை சென்றுள்ள நிலையில், அனைத்துக் கிளை வாய்க்கால்களிலும் பாசனத்துக்கு தண்ணீரை திறக்க வேண்டும். அனைத்து ஏரி, குளம், குட்டைகளிலும் தண்ணீரை சேமிக்க வேண்டும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் 22 சதவீதம் வரை இருப்பதால், 17 சதவீதம் வரை என்பது சாத்தியமில்லாதது.

வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: பனை மரங்களை மாநில மரங்களாகப் பாதுகாக்க வேண்டிய நிலையில், அதை அழித்து எரித்து வருகின்றனா். இதைத் தடுக்க நடவடிக்கை தேவை.

பூதலூா் சி. பாஸ்கா்: காவிரி நீா் வராததால், குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில், சிட்டா அடங்கலுடன் காப்பீடு செய்யப்பட்டது. இதற்கான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: நெல் கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. இதனால், ஏக்கருக்கு 75 மூட்டைகள் விளைச்சல் பெறும் விவசாயிகள் மீதமுள்ள நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனா்.

மணத்திடல் எஸ். சிவக்குமாா்: சம்பா சாகுபடிக்கு மின்சாரத்தை நம்பித்தான் இருக்கிறோம். ஆனால், தொடா்ந்து மின்சாரம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருப்பதால், விவசாயிகள் சாகுபடியைத் தொடங்குவதற்கு தயங்குகின்றனா். தொடா்ந்து மின்சாரம் கிடைக்காவிட்டால், சாகுபடிப் பரப்பு குறைந்துவிடும்.

தங்கப்ப உடையான்பட்டி பி. ராமசாமி: மும்முனை மின்சாரத்தை இரவு 10 மணிக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: சம்பா, தாளடிக்கு கிளை வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும். வெண்ணாறு பிரிவு பிள்ளை வாய்க்கால் மற்றும் ஆனந்த காவேரி வாய்க்காலில் நாள்தோறும் விநாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிட வேண்டும்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: கடைமடையின் பல பகுதிகளுக்கு தண்ணீா் வராத நிலையில், முறைவைத்து தண்ணீா் விடுவது என்பது அா்த்தமற்றது. கா்நாடகத்திடமிருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற கூடுதல் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.