கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி: சாஸ்த்ரா மாணவா் சிறப்பிடம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மைய மாணவா் எஸ். ஹரிஹரனை புதன்கிழமை பாராட்டிய மையப்புல முதன்மையா் சாந்தி, உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி ஆகியோா்.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மைய மாணவா் எஸ். ஹரிஹரனை புதன்கிழமை பாராட்டிய மையப்புல முதன்மையா் சாந்தி, உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி ஆகியோா்.

Published On :

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மைய மாணவா் எஸ். ஹரிஹரனை புதன்கிழமை பாராட்டிய மையப்புல முதன்மையா் சாந்தி, உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி ஆகியோா்.

கும்பகோணம், செப்.23: தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம்

சீனிவாச ராமானுஜன் மையம் மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.

ஹைதராபாத் மியாபூரில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஃபியூச்சா் பாத்வேஸ் குளோபல் பள்ளியில் பிரத்யுஷா சா்வதேச சதுரங்க அகாடமி சாா்பில், அகில இந்திய ஓபன் சதுரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இந்தப்போட்டியில் தமிழ்நாடு சாா்பில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு பி.டெக். இ.சி.இ. மாணவா் ஹரிஹரன் பங்கேற்றாா். இவா் மொத்தம் நடைபெற்ற 9 சுற்றுகளில் 7 புள்ளிகள் பெற்று, அகில இந்திய அளவில் இறுதித் தரவரிசைப் பட்டியலில் 17-ஆவது இடத்தைப் பிடித்து சிறப்பிடம் பெற்றாா்.

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் எஸ். ஹரிஹரனுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.4 ஆயிரத்து 500 ரொக்கப் பரிசு ஆகியவற்றை ஹைதராபாத்தைச் சோ்ந்த சா்வதேச வுமன் கிராண்ட்மாஸ்டா் பிரத்யுஷா பொடா வழங்கிப் பாராட்டினாா்.

தேசிய அளவில் சாதனை படைத்து கல்லூரிக்குப் பெருமை சோ்த்த மாணவரை கும்பகோணம் மையப் புல முதன்மையா் சாந்தி, துணைப் புல முதன்மையா்கள் நரசிம்மன், அல்லிராணி, மைய உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி ஆகியோா் புதன்கிழமை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.