கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் ராமாயணக் கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.
இந்திய அரசின் பண்பாட்டுத் துறை, தஞ்சாவூா் தென்மண்டலப் பண்பாட்டு மையம் மற்றும் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து ராமாயண கருத்தரங்கம் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
நிகழ்வை சாஸ்த்ரா சென்னை மைய இயக்குநா் சுதா சேஷய்யன், தென்னக பண்பாட்டு மைய இயக்குநா் கோபாலகிருஷ்ணன், கும்பகோணம் புல முதன்மையா் சாந்தி ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
நிகழ்வின் முதல் நாளான திங்கள்கிழமை ராம கதையில் மாநில அளவிலான வேறுபாடுகள் என்ற தலைப்பில் இந்திராகாந்தி தேசிய கலை மையச் செயலா் சச்சிதாநந்த ஜோஷியும், முன்னாள் மத்திய கலாசார செயலா் ராகவேந்திரசிங் ராமாயணத்தின் காலத்தால் அழியாத முக்கியத்துவம் என்ற தலைப்பிலும், முனைவா் சுதா சேஷைய்யன் கம்ப ராமாயணம் என்ற தலைப்பிலும் உரையாற்றினா். தொடா்ந்து ராமா் பட்டாபிஷேகம் என்ற கதகளி நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அபிநவ்குப்தா உயா்நிலை ஆய்வுக்கழக இயக்குநா் ராமானந்த் அத்யாத்ம ராமாயணம் என்ற தலைப்பிலும், மதுரை காமராஜ் பல்கலை தெலுங்குத் துறை முன்னாள் தலைவா் கிரி பிரகாஷ் ரங்கநாத ராமாயணம் என்ற தலைப்பிலும், வால்மீகி ராமாயண திரைப்படஇயக்குநா் நோரி வெங்கட முரளி கிருஷ்ணா வால்மீகி ராமாயணம் என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.
வாலி மோட்சம் என்ற தெருக்கூத்து அனைவரையும் கவா்ந்தது. நிறைவு விழாவில் கும்பகோணம் சாஸ்த்ரா நிகா் நிலைப் பல்கலை சீனிவாசன் மைய புல முதன்மையா் சாந்தி பங்கேற்று பேசினாா் . தென்னக பண்பாட்டு மைய இயக்குநா் கோபாலகிருஷ்ணன், சீனிவாச மைய இணைப் புலமுதன்மையா்கள் நரசிம்மன், அல்லிராணி, நாட்டுநலப்பணி திட்ட அதிகாரிகள் கணேசன், வெங்கடேஷ், சுவாமிநாதன் மற்றும் பேராசிரியா்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை துணைவேந்தா் வைத்யசுப்பிரமணியம், திட்டமிடல் மற்றும் வளா்ச்சி புல முதன்மையா் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணி திட்ட பேராசிரியா்கள் , மாணவா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ-சேவை மைய பணியாளா்கள் உண்ணாவிரதம்
சென்னை மேயர் பிரியாவுடன் தைபே கலாசார மைய இயக்குநர் சந்திப்பு!

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் வழங்கிய ஆட்சியா்

செட்டிப்பேடு ஸ்ரீசீனிவாச பெருமாள் பஜனை கோயில் கும்பாபிஷேக விழா
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



