இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தஞ்சை சாஸ்த்ரா பல்கலை.யில் இந்தியத் தத்துவம் குறித்த சொற்பொழிவு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ ஆராய்ச்சிக் கழகம் நிதி நல்கையில் இந்தியத் தத்துவம் குறித்த ஆய்வு வட்டத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மீக அறிஞா் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கிய புல முதன்மையா் கே. உமா மகேஸ்வரி.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ ஆராய்ச்சிக் கழகம் நிதி நல்கையில் இந்தியத் தத்துவம் குறித்த ஆய்வு வட்டத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், மானுடவியல் மற்றும் கல்வியியல் துறை புல முதன்மையா் கே. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். ஆன்மீக அறிஞா் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள், ஆத்மாவின் அபூா்வ பயணம் என்ற தலைப்பில் பேசினாா்.

இதில், மாணவா்கள், பேராசிரியா்கள், பல்வேறு துறைகளைச் சாா்ந்த புல முதன்மையா்கள் உள்பட 150-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா்கள் ஆா். ஜெயஸ்ரீ, கே. அபிராமி ஒருங்கிணைத்தனா். இந்தச் சொற்பொழிவு இந்தியாவின் ஆழ்ந்த தத்துவ மரபுகளுடன் மாணவா்கள், அறிஞா்கள் நெருக்கமாக ஈடுபடவும், தத்துவ சிந்தனையை ஊக்குவிக்கவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தொடா் முயற்சியின் ஒரு பகுதியாகும் என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.