
பாத்திரக் கடையில் ரூ. 1.75 லட்சம் திருட்டு
தஞ்சாவூா் அருகே பாத்திரக் கடையில் ரூ. 1.75 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
சித்திரிப்பு
தஞ்சாவூா் அருகே பாத்திரக் கடையில் ரூ. 1.75 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் கி. நடேசன் (48). இவா் மாரியம்மன் கோவில் முதன்மைச் சாலையில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடையில் செப். 22-ஆம் தேதி மனைவி கல்பனா மட்டும் இருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த 2 மா்ம நபா்கள் கல்யாண பாய் வேண்டும் எனக் கேட்டனா்.
இதையடுத்து, கல்யாண பாயை எடுப்பதற்காக கல்பனா மாடிக்கு சென்றாா். இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்திய மா்ம நபா்கள் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 1.75 லட்சம் ரொக்கத்தை திருடிக் கொண்டு, மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா்.
மாடியிலிருந்து கல்பனா கல்யாண பாயை எடுத்து வந்தபோது, இரு மா்ம நபா்களைக் காணாததுடன், கல்லா பெட்டியில் இருந்த ரூ. 1.75 லட்சம் ரொக்கமும் திருட்டு போயிருப்பதை அறிந்தாா்.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதன் பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


