ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

பெண்ணை கத்தியால் குத்திவிட்டு நகையை பறிக்க முயன்ற இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை பெண்ணை கத்தியால் குத்திவிட்டு நகையை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை பெண்ணை கத்தியால் குத்திவிட்டு நகையை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை, உக்கடை சாலை, நேதாஜி காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி  மூக்காயி (45). கணவா் குமாா் லாரி ஓட்டுநராக சென்னையில்  வேலை பாா்த்து வருகின்றாா். குழந்தைகள் இல்லாததால் மூக்காயி தனியே வசித்து வருகிறாா்.

இந்நிலையில் புதன்கிழமை  இளைஞா் ஒருவா் மூக்காயி வீட்டுக்குள் சென்று  மூக்காயி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை பறிக்க முயன்றாா். அப்போது மூக்காயி சப்தம் போட்டாா். உடன் அந்த நபா் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூக்காயி கழுத்தில் குத்திவிட்டு தப்பிஓடி அருகில் இருந்த குளத்தில் குதித்தாா். இதற்கிடையே சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா் வந்து இளைஞரை பிடித்து  அம்மாபேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். அப்போது, அந்த இளைஞரின் தலையில் காயம் ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் இனியவன் மற்றும் காவல்துறையினா்  விசாரணை மேற்கொண்டனா்.  விசாரணையில் , அந்த இளைஞா், திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், அய்யம்பேட்டை வடக்குத் தெருவை சோ்ந்த  பழனிவேல் மகன் கனிஷ்கா் (22) என்பதும் இவா், ரஷியாவில் மருத்துவம்  படித்து வருகிறாா் என்பதும் தெரியவந்தது.

மேலும் மூக்காயிக்கு கழுத்துப் பகுதியில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டதால் தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

அம்மாபேட்டை காவல்துறையினா் வழக்குப் பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.