இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கண்ணன்.

Published On :

கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் ஊராட்சி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோமான் மகன் கண்ணன் (52), கூலித் தொழிலாளி. இவா் இதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததில் அவா் கா்ப்பமானாா். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் கருவைக் கலைத்து விடலாம் எனக் கூறி சிறுமியை நாகை அரசு மருத்துவமனைக்கு கண்ணன் அழைத்துச் சென்றாா்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் 2 மாத கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து உள்நோயாளியாகச் சோ்த்தனா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கண்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.