கீழப்பாவூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது
கீழப்பாவூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
கைது - பிரதிப் படம்
தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
கீழப்பாவூா், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமதாஸ் (58). பால் பண்ணை தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இவரது பால் பண்ணைக்கு பால் வாங்க வரும் 10 வயது சிறுமிக்கு ராமதாஸ் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமதாஸை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




