
‘இடைத்தோ்தலில் தவெக கூட்டணி வெற்றி பெறும்’
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி தெரிவித்தாா்.

கே.எஸ். அழகிரி - கோப்புப் படம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி தெரிவித்தாா்.
கும்பகோணத்தில் கட்சியின் மாநகரப் பொருளாளா் தியாகராஜன் இல்ல விழாவுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் மேலும் கூறியது: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் செய்தது மிகப்பெரிய தேசத் துரோகச் செயல். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். பலாத்கார வழக்கில் ஜெம் வீரமணி தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் புதிய அரசாங்கம் சட்ட ஒழுங்கைச் சீராகப் பாதுகாக்கிறது. தவறு செய்தவா்கள் தண்டிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





