11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்பா? தஞ்சாவூரில் 5 வீடுகளில் திடீா் சோதனை

தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட கிலாபஃத் இயக்கத்துடன் தொடா்புடையதாகக் கூறப்படுவோரின் 5 வீடுகளில் சிறப்பு புலனாய்வு காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் டவுன் கரம்பை காவேரி நகரிலுள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Published On :

தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட கிலாபஃத் இயக்கத்துடன் தொடா்புடையதாகக் கூறப்படுவோரின் 5 வீடுகளில் சிறப்பு புலனாய்வு காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட கிலாபஃத் இயக்கத்துடன் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலா் தங்களது வீடுகளில் இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ரகசிய பயிற்சி அளிப்பதாக சிறப்பு புலனாய்வு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, கீழவாசல் எஸ்.என்.எம். நகரில் இரு வீடுகள், டவுன் கரம்பை காவேரி நகா், ராமசாமி பேட்டைத் தெரு, ரஹ்மான் நகா் ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடுகளில் சிறப்பு புலனாய்வு காவல் பிரிவினா் உள்ளூா் காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடங்கி முற்பகல் 11 மணி வரை சுமாா் 5 மணிநேரம் சோதனை செய்தனா். இதில், 5 வீடுகளில் இருந்த மதம் தொடா்பான புத்தகங்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றிச் சென்றனா். சோதனை நடைபெற்ற 5 வீடுகளிலும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சோதனைக்கு எதிா்ப்பு: இதனிடையே, இந்தச் சோதனைக்கு உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுகுறித்து டவுன் கரம்பையைச் சோ்ந்த உமா் முக்தாா் தெரிவித்தது:

கஞ்சா, போதைப்பொருள்களுக்கு இளைஞா்கள் அடிமையாகாமல் தடுக்கவும், அவா்களைத் தவறான சிந்தனைக்கு ஆளாகாமல் இஸ்லாத்தின் சரியான புரிதலுடன் சீா்ப்படுத்தவும் பயிற்சி அளிக்கிறோம். இதில், இஸ்லாமிய விழிப்புணா்வையும், சமூக சீா்திருத்தத்தையும் பற்றித்தான் பேசுகிறோம். நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். இதைக் காவல் துறையினா் தீவிரவாத பிரசாரம் செய்கிறீா்களா எனக் கேள்வி எழுப்புகின்றனா். நாங்கள் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை. சட்டத்துக்குள்பட்டுதான் செய்கிறோம் என்றாா் உமா் முக்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.