மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ராமதாஸின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 147 பேர் கைது

திருச்சியில் அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் கூட்டம் நடத்தி சாதி வெறியைத் தூண்டுவதாகக் கூறி

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:29 am

தினமணி

திருச்சியில் அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் கூட்டம் நடத்தி சாதி வெறியைத் தூண்டுவதாகக் கூறி வெள்ளிக்கிழமை
 போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 147 பேரை போலீஸôர் கைது
 செய்தனர்.
 அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கூட்டம் நடைபெற்ற சங்கம் ஹோட்டலுக்கு கூட்டமாக புறப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸôரையும் மீறி அவர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே முன்னேறினர். எனவே, போலீஸôர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதாக அறிவித்தபோது, கன்டோன்மென்ட் காவல் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைவரையும் போலீஸôர் கைது செய்தனர்.
 இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கா. அரசு, அ.க. தமிழாதன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கோ. சங்கர், ம. அய்யப்பன் உள்ளிட்ட 87 பேர் கைது செய்யப்பட்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சங்கம் ஹோட்டல் நோக்கி வந்தனர்.
 ஜான் வெஸ்ட்ரி பள்ளி முன்பாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸôர் அவர்களை சுற்றி வளைத்தனர். கழகத்தின் மாவட்டச் செயலர் எஸ். சீனிவாசன் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மக்கள் மறுமலர்ச்சி இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 20 பேர் சங்கம் ஹோட்டலை நோக்கி வந்தபோது வெஸ்ட்ரி பள்ளி அருகே கைது செய்யப்பட்டனர். மேலும், மக்கள் தமிழகம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் புரட்சிக் கவிதாசன் தலைமையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தனித்தனி குழுவாக வந்து கைதானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் 147 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 10 பேர் பெண்கள். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 இதனிடையே, அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்தைக் கண்டித்து கல்லூரி வளாகத்தில் ராமதாஸின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீஸôர் அந்த பொம்மையைப் பறித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.