சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

"விவசாயப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்'

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், மனுக்களை அளித்த பல்வேறு அமைப்புகள் விவசாயப் பிரச்னைக்கும், நதிநீர் இணைப்புக்கும் முக்கியத்துவம் தர வலியுறுத்தின.

Updated On :

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், மனுக்களை அளித்த பல்வேறு அமைப்புகள் விவசாயப் பிரச்னைக்கும், நதிநீர் இணைப்புக்கும் முக்கியத்துவம் தர வலியுறுத்தின.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரிடம் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், வர்த்தக, வியாபார சங்கத்தினர், விவசாய சங்கங்களைச் சேர்ந்தோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலர் பெரியண்ணன் அரசு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கொள்ளிடம் ஆறுடன் அக்னியாறு, வெள்ளாறு ஆகியவற்றை இணைத்தால் வெள்ளநீர் வீணாகாமல் விவசாயத்துக்குப் பயன்படும்.

புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், குடுமியான்மலை, வம்பன் வேளாண் பண்ணைகளை மேம்படுத்த வேண்டும் என்றனர்.

தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு:

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தொண்டைமான் கால்வாய் திட்டம் (காவிரி- வைகை- வைப்பாறு) நிறைவேற்ற வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதுடன், விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு சமூக நலவாரியத்தின் முன்னாள் தலைவி கவிஞர் சல்மா: மணப்பாறை பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.

மண்ணச்சநல்லூர் ஒன்றிய திமுக செயலர் வி.எஸ்.பி. இளங்கோவன்: திருமணத்தை பதிவு செய்யும் புதுமண தம்பதிகளுக்கு 15 நாள்களுக்குள் குடும்ப அட்டை வழங்குவதுடன், குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் படத்துடன், குடும்பத் தலைவி படத்தையும் இணைத்து வழங்க வேண்டும்.  இதுபோன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

குழுவில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக துணைப் பொதுச் செயலர்கள் சுப்புலட்சுமி ஜகதீசன், வி.பி. துரைசாமி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பேராசிரியர் ராமசாமி, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வழக்குரைஞர்கள் சண்முகசுந்தரம், இளங்கோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி ந. தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.