திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அவசியம் தேவை

நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அவசியம் தேவை என்றார் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அவசியம் தேவை என்றார் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன்.

திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்று, பல்துறைகளில் சிறந்து விளங்கி வரும் முன்னால் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி, மேலும் அவர் பேசியது:

இன்றைய நிலையில் உலகில் வளர்ந்த நாடுகளில் மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா இடம்பெற்றிருந்தாலும் பல்வேறு நிலைகளில் சவால்களை சந்தித்து வருகிறது. நம் இந்தியர்களின் அறிவை பயன்படுத்திக் கொண்டுதான் பல்வேறு நாடுகள் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கும், பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டும். இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கும் நிலையில், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தகவல் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு முக்கியமானது. நாட்டின் பாதுகாப்பில் அனைவருக்கும் பொறுப்புஉள்ளது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அவசியமானது.

நாட்டின் அனைத்துத் துறைகளின் தகவல்களும் இணையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்றைய நிலையில் சைபர் தீவிரவாதம் என்பது பெரும் அச்சுறுதலாக மாறிவிóட்டது. இணையத்தை முடக்கி, தகவல்களைத் திருடுவது போன்ற செயல்களில் தீவிரவாதிகள் ஈடுபடுவது நமக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினால் மட்டுமே சிறந்த நிர்வாகம் என்று கூற முடியாது. அறிவித்து செயல்படுத்தப்படும் திட்டம் தேவைப்படும் மக்களுக்கு முறையாக சென்றடைந்தால் மட்டுமே அந்த அரசு சிறந்த நிர்வாகத்திறன் கொண்டதாக கூற முடியும்.

ஆனால் மக்களுக்கான திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவது கிடையாது. இதை கண்காணிக்க நம்மிடம் தொழில்நுட்பம் கிடையாது. மின் ஆளுமை தொழில்நுட்பத்தை எல்லா நிலைகளிலும் மேம்படுத்தினால் மட்டுமே சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்த முடியும்.

மேலும், பல்வேறு ஆய்வுகள் மூலம் புதுமைகளை கண்டுபிடிக்க முகமைகளை அமைக்கவேண்டும். தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவேண்டும். இதுவே முன்னேற்றத்தின் வழியாகும் என்றார் அவர்.

இந்த விழாவுக்கு என்.ஐ.டி. நிர்வாகக் குழுத் தலைவர் குமுத் சீனிவாசன் தலைமை வகித்தார்.விழாவில் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ராஜன் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் சீனிவாச சுந்தர்ராஜன் வரவேற்றார். மாணவர் சங்க தலைவர் ரஜத் சங்க்லெச்சா நன்றிகூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.