துறையூர் அருகே மாணவரைக் கண்டிக்கச் சென்ற மாணவியின் குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.
வைரிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பூசாரி(65), விவசாயி. இவரது 16 வயது மகள் கொப்பம்பட்டியில் தனது பாட்டி வீட்டில் தங்கி வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.
இதேப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பவர் வைரிசெட்டிப்பாளையம் தங்கராசு மகன் சசிகுமார்(17). இவர் அந்த மாணவியைப் பின்தொடர்வது, செல்பேசியில் போட்டோ எடுப்பதுமாக தொந்தரவு செய்துள்ளார். பிறகு அந்த மாணவியின் படத்தை சசிக்குமார் வாட்ஸ்அப்பில் பரவவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த மாணவி சசிக்குமாரின் தொந்தரவை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தந்தை பூசாரி, அவருடைய மகள்கள், மகன் ஆகியோர் இதுகுறித்து சசிக்குமாரிடம் கேட்டபோது சசிகுமார் அவரது நண்பர்கள் தினேஷ், அசோக், திவாகரன் ஆகியோர் சேர்ந்து மாணவியின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த பூசாரியும் அவருடைய குடும்பத்தினரும் உப்பிலியபுரம் போலீஸில் புகார் செய்தனர். உடனே சிகிச்சை பெறுமாறு போலீஸார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து நால்வரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்றனர். இந்த சம்பவத்தால் ஆங்கிலம் 2-ஆம் தேர்வை எழுத முடியாத மன உளைச்சலில் அந்த மாணவி தந்தையுடன் அரசு மருத்துவமனையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







