முசிறி அருகே தண்டலைபுத்தூர் சேர்ந்தவர் ந. பரமசிவம் (59) இவர் இருசக்கர வாகனத்தில் பேரன் சத்தியதேவுடன் (3) பொன்னாங்கன்னிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
தண்டலைப்புத்தூர் - பொன்னாங்கன்னிப்பட்டி சாலையில் வந்தபோது எதிரே அட்டாளப்பட்டி சின்னதுரை மகன் சதீஷ் (21) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பரமசிவத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தை சத்தியதேவின் வலது கால் முறிந்தது. தண்டலைப்புத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் குழந்தை சத்தியதேவ் சேர்க்கப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரமசிவம் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக பரமசிவத்தின் மகன் சதீஷ்குமார் (29) முசிறி போலீஸில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.பி. சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஓர் இந்தியப் பிரதமர்

சிலிண்டர் முதல் ஆதார் வரை..! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

சிக்க வைத்த 238 மணி நேர போன் பேச்சு, சிசிடிவி காட்சி! புணே கொலையில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்ணின் சூப்பர் பிளான்!
என்எல்சி பங்கு விற்பனை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP


