தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

உயர்கல்வியில் சிறப்படைய தொலைநோக்குத் திட்டங்கள் தேவை

உயர்கல்வியில் இந்தியா சிறப்படைய தொலைநோக்குத் திட்டங்கள் தேவை என்றார் அனைத்து  இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கப் பொதுச் செயலர் பர்கன் காமர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:42 am IST

உயர்கல்வியில் இந்தியா சிறப்படைய தொலைநோக்குத் திட்டங்கள் தேவை என்றார் அனைத்து  இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கப் பொதுச் செயலர் பர்கன் காமர்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது: இன்றைய நிலையில் உயர்கல்விப் பயில்வோருக்கு நிறைய வாய்ப்புகள் தேவைப்படுகிறது. ஆனால் நாம் அந்த வாய்ப்புகளைத் தருவதில்லை. வாய்ப்புகள் தந்தால்தான் அதிகளவிலான பேர் வளர்ச்சி பெறுவர். 
பொறியியல் படிப்புகளில் மாணவர்களுக்கு இணையாக மாணவிகள் கல்விப் பயின்று வருகின்றனர். உயர்கல்வியில்  உயர்ந்த நிலையை அடைய  தொலைநோக்குத் திட்டங்கள் தேவை. நிறைய புதுமையான கண்டுபிடிப்புகளும் தேவைப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது  உயர்கல்வியில் சிறப்பான நிலையை அடைய முடியும் என்றார் அவர்.
விழாவுக்கு, தேசிய தொழில்நுட்பக் கழகஇயக்குநர் மினி ஷாஜி தாமஸ் விழாவுக்குத் தலைமை வகித்தார். விழாவில் கல்விப் புல அளவில் ஆய்வு இதழ்கள், ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொண்ட  பேராசிரியர்களுக்கும், சிறந்த மாணவர்களுக்கும் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.    
என்.ஐ.டி.யின்  சாதனைகள் குறித்த அறிக்கையை  புல முதன்மையர் (கல்வி)  சி.நாகமணி  வழங்கினர். பேராசிரிய, பேராசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் நிறுவன நாள் விழாவில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.