திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைகாலப் பயிற்சி முகாம் ஏப். 26 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்திலுள்ள 16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட அளவிலான கோடைகாலப் பயிற்சி முகாமை ஏப். 26 முதல் மே 16 வரை 21 நாள்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடத்த உள்ளது. காலை 6.30 மணி முதல் காலை 8.30, மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறும் முகாமில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கையுந்துப் பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, தேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும்.
கல்வி மாவட்ட அளவில் உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் மூன்று கல்வி மாவட்டங்களிலும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், முசிறி , லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி நடைபெறும். சிறப்பாக பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு அண்ணா விளையாட்டரங்கத்தில் மே 2 முதல் 16 ஆம் தேதி வரை இருப்பிடப் பயிற்சி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0431-2 420685.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


