திருச்சியில் நடைபெறும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
திருச்சி ஸ்டார் சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஏப்ரல் 22ஆம் தேதி பீமா நகரில் உள்ள செவன்த்டே பள்ளியில் நடைபெறவுள்ளது. 7 வயதுக்குள்பட்டோர், 9 வயதுக்குள்பட்டோர், 11 வயதுக்குள்பட்டோர், 13 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறும். இதில், முதல் 15 இடங்களுக்குள் வரும் நபர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது பெயரை ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 90434-27661, 98433-61122, 90801-81709 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஸ்டார் சதுரங்க கழகச் செயலர் பி.இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்! அமைச்சா் செங்கோட்டையன் ஆறுதல்
சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளி போக்ஸோவில் கைது

விடுதியில் தங்கியிருந்த தொழிலாளி உயிரிழப்பு
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


