/

தமிழ்வழி கல்விப் பயின்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது

திருச்சி மாவட்டத்தில்  பிளஸ்2 , எஸ்எஸ்எல்சி  வகுப்புகளில்  தமிழ்வழியில் பயின்ற தனித்திறன் வாய்ந்த 30 மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருதுகள் வழங்கப்பட்டன.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:57 am IST

திருச்சி மாவட்டத்தில்  பிளஸ்2 , எஸ்எஸ்எல்சி  வகுப்புகளில்  தமிழ்வழியில் பயின்ற தனித்திறன் வாய்ந்த 30 மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி  பயின்ற (2016-17 கல்வியாண்டு)  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையிலும், கல்விச் செயல்பாடுகள் உள்ளிட்ட பிறத் தனித்திறன்கள் உடைய சிறந்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் காமராஜர் விருது மற்றும் காசோலை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட  30 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில்  காமராஜர் விருது, தலா ரூ.20,000-த்துக்கான காசோலையையும் ஆட்சியர் கு.ராசாமணி  வழங்கி வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.