பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலரிடம் ரூ. 65 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அலுவலர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜூ. கிராம நிர்வாக அலுவலரான இவருக்கும், சென்னை தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகக் கூறி வந்த ஸ்ரீராமுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். காரில் சுழலும் சிவப்பு விளக்குப் பொருத்தி வலம் வந்துள்ளாராம்.
தனக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் பழக்கம் இருப்பதாக ஸ்ரீராம் கூறியதை நம்பிய ராஜூ, தனக்குப் பதவி உயர்வு வாங்கித் தருமாறுக் கூறி, ரூ.65 லட்சத்தை பலதவணைகளில் தந்தாராம். ஆனால், அதன் பின்னர்தான், ஸ்ரீராம் போலி அதிகாரி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்தாண்டு ஜூலை மாதம், சிதம்பரம் காவல் நிலையத்தில் ராஜூ அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இத்தகவலைத் தெரிந்த ஸ்ரீராம் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறினாலும் பணம் தரவில்லையாம்.
இந்த நிலையில், திருச்சி கே.கே.நகரிலுள்ள தனது வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிச் செல்லுமாறு ஸ்ரீராம் கூறியதை நம்பி, ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜூ திருச்சி வந்தார். ஸ்ரீராம் வீட்டுக்குச் சென்ற போது, ஸ்ரீராமும், அவரதுஉறவினர்களும் சேர்ந்து ராஜூவை அடித்து உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜூ, சிகிச்சை பெற்ற பின்னர், மாநகரக் காவல் ஆணையர் ஏ. அமல்ராஜை திங்கள்கிழமை சந்தித்து, புகார் அளித்தார். புகாரின் பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை மாலை வழக்குப்பதிந்து, ஸ்ரீராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
