திருச்சி கீழரண்சாலையில் டிரம்முக்குள் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.
கீழரண்சாலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சுரேஷின் ஒன்றரை வயது மகள் யோகலட்சுமி. இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் பின்புறப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குடிநீர்த் தொட்டிக்கு அருகில் இருந்த சிறிய அளவிலான டிரம்மில் குழந்தை தவறி விழுந்தார்.
இதை கண்ட அவரது பெற்றோர் , உறவினர்கள் மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை யோகலட்சுமி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


