உய்யக்கொண்டான் வாய்க்கால் மாசுபடுவதை தடுக்காத மாநகராட்சி நிர்வாகம் மீது வழக்கு: தண்ணீர் அமைப்பு முடிவு
உய்யக்கொண்டான் வாய்க்கால் மாசுபடுவதை தடுக்காத மாநகராட்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர தண்ணீர் அமைப்பு முடிவு செய்துள்ளது.


உய்யக்கொண்டான் வாய்க்கால் மாசுபடுவதை தடுக்காத மாநகராட்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர தண்ணீர் அமைப்பு முடிவு செய்துள்ளது.
தண்ணீர் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எம். சேகரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கி.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், உய்யக்கொண்டான் வாய்க்காலில் பல கட்டங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க
மாவட்ட ஆட்சியர், உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு கூட்டத்தை கூட்டியோ அல்லது சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசியோ தீர்வு காணவேண்டும். இந்த கோரிக்கை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மாநகராட்சியை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்வது, காவிரி ஆற்றுக்கரையில் கட்டப்படும் கட்டடங்களுக்காக அங்குள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன.
இவைகளை தடுக்க பொதுப்பணி துறை, மாநகர திட்ட குழுமம், வருவாய் துறை, மாநகராட்சி ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, அமைப்பின் செயலர் கே. சி. நீலமேகம் வரவேற்றார். இணை செயலாளர் தாமஸ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...