பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஜமால் முகமது கல்லூரியில் மாணவியர் பிரிவு விளையாட்டுப் போட்டி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாணவியர் பிரிவுக்கான 17ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில்  மஞ்சள் நிற அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:12 am IST

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாணவியர் பிரிவுக்கான 17ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில்  மஞ்சள் நிற அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற  விளையாட்டு விழாவில், 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற  பல்வேறு போட்டிகளில் 1,500 மாணவியர் பங்கேற்றனர். இதில் 41 புள்ளிகளைப் பெற்ற மஞ்சள் நிற அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஆர். ஷோபனா தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். 
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். உதவி உடற்கல்வி இயக்குநர் கே.பிரதீப் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சவுதி அரேபியா ஆல்பா சரக்கு சேவைகள் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு மேலாளர் எம்.சிராஜூதீன் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜ்முதீன், பொருளாளர்எம்.ஜெ. ஜமால் முகமது, உதவிச் செயலர் அப்துல் சமது,  உடற்கல்வி இயக்குநர் பி.எஸ்.ஷாயின்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.