கொள்ளிடம் டோல்கேட்டில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், கொள்ளிடம் டோல்கேட்டைச் சேர்ந்தவர் அப்சல்(27). இவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அப்பகுதியில் நின்றிருந்தார். அங்கு மது போதையில் வந்த இரு இளைஞர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அப்சலிடம் பணம் பறிக்க முயன்றனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இருவரையும் பிடித்து கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சார்பு ஆய்வாளர் ஜெயகுமார் தலைமையிலான போலீஸார், பிடிபட்ட இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில், தாளக்குடி பஜனை மடத்தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன்(27), பகவதி மகன் கருணாநிதி(22) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

