ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

கருணாநிதி மறைவால் வெறிச்சோடிய திருச்சி மாநகர்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சி மாநகர்

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. 
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவரது மறைவு செய்தியைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்திலும், மாநகரத்திலும் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கமும் படிப்படியாக குறைக்கப்பட்டன.
வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள் :  பேருந்துகள் இயக்கமின்றி மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.  பேருந்து நிலையத்தைச் சுற்றியிருக்கும் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், தேநீரகங்கள் மற்றும் இதர விற்பனையகங்கள் மூடப்பட்டிருந்தன. இதுபோல, சத்திரம் பேருந்து நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டன.  இரு சக்கர வாகனப் போக்குவரத்தும், சில ஆட்டோக்களின் இயக்கமும் மட்டுமே இருந்தன.
திருச்சி மாநகர் மட்டுமின்றி புறநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அஞ்சலி : மாநகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பல கடைகளில் அந்த கடை நிர்வாகம் சார்பில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிறிய அளவில் முதல் பெரிய அலவிலான பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. வெல்லமண்டி, காந்தி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறிகடைகள், வெங்காயக் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பல தொழிலாளர்கள் கடைக்கு அருகிலேயே அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
ரயில் நிலையத்திலும் கூட்டம் : பேருந்துகள் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில், பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில்களில் பயணம் செய்வதற்காக திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்ய பலரும் காத்திருந்தனர். அதுபோல, பகலில் நேரங்களில் இயக்கப்படும் பயணிகள் ரயிலிலும் கூட்டம் காணப்பட்டது.
சைக்கிளில் தேநீர் விற்பனை : மாநகரில் தேநீரகங்கள் அடைக்கப்பட்ட நிலையில்,  பாலக்கரை, தென்னூர், சத்திரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் சைக்கிளில் தேநீர் விற்பனை நடைபெற்றது.  இதுபோல, பெரியக்கடைவீதியின் சில பகுதிகள் உள்சாலைகளில் சில தேநீரகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு ஏராளமானோர் சென்று தேநீர் அருந்தினர்.
எப்போதும் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும் பெரியக்கடைவீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, சின்னக்கடைவீதி,  நந்திகோயில் தெரு, பாலக்கரை, காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
காவல்துறை பாதுகாப்பு:  மத்திய பேருந்து நிலையத்தில் வஜ்ரா பாதுகாப்பு வாகனம் மற்றும் போலீஸாரும், சத்திரம் பேருந்து நிலையம்,  மாநகரின் முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து வாகனம் நிறுத்தப்பட்டு போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் காவல்துறையினர் ரோந்து வாகனம் மூலம் ரோந்தில் ஈடுபட்டனர்.
பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் :  திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்குள்பட்ட விரைவுப் பேருந்துகள், சொகுசுப் பேருந்துகளும்,  கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையிலுள்ள புறநகர்ப் பேருந்து பணிமனைகளில் புறநகர்ப் பேருந்துகளும், தீரன்நகர், எடமலைப்பட்டிபுதூர், சாலை ரோட்டிலுள்ள பணிமனைகளில் நகரப் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதுபோல, தனியார் பேருந்துகள் அதன் உரிமையாளர் வீடுகள் அல்லது அவர்களுக்குரிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.