துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

தப்பியது கொள்ளிடம் புதுப்பாலம்!

திருச்சியில் சனிக்கிழமை நள்ளிரவு உடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலத்தின் அருகிலுள்ள புதுப்பாலம் பொறியாளர்களின் சமயோசிதத்தால் ஆபத்திலிருந்து தப்பியது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:15 am IST

திருச்சியில் சனிக்கிழமை நள்ளிரவு உடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலத்தின் அருகிலுள்ள புதுப்பாலம் பொறியாளர்களின் சமயோசிதத்தால் ஆபத்திலிருந்து தப்பியது.
தற்போது இடிந்துள்ள கொள்ளிடம் இரும்புப் பாலத்தின் மேற்குப் பகுதியில் புதிய பாலம் கடந்த 2016 பிப்ரவரி 14-ல் திறக்கப்பட்டது. அந்தப் பாலத்தை பொறியியல் வல்லுநர்கள் பழைய பாலத்தின் மேற்கு திசையில் அமைத்ததன் சிறப்பு தற்போது தெரியவந்துள்ளது.
புதிய பாலம் அமைக்கும்போது எந்தப் பகுதியில் இடம் உள்ளதோ அந்த பகுதியில் அமைப்பதுதான் வழக்கம். 
ஆனால் கொள்ளிடம் பாலம் அமைக்கும்போது, பழைய பாலத்துக்கு கிழக்குப் பகுதியில் ஏராளமான இடம் இருந்தும், அப்பகுதியில் அமைக்கவில்லை. மேற்குப் பகுதியில் இருந்த குடிசைகளை அகற்றிவிட்டு மேல் திசையிலேயே புதிய பாலம் அமைக்கப்பட்டது. 
தற்போது பழைய பாலம் இடிந்த நிலையில், அதற்கு கிழக்குப் பகுதியில் புதிய பாலம் இருந்திருந்தால், பழைய பாலத்திலிருந்து இடிந்து விழுந்த மிகப்பெரிய அளவிலான இரும்பு கர்டர்கள் மற்றும் பாலத்தின் இடிபாடுகளால் புதிய பாலம் விரைவில் சேதம் அடைந்திருக்கும்.  நீரின் போக்கு கடுமையாக இருப்பதால், புதிய பாலத்தின் தூண்களை இடிபாடுகள் தாக்கி அவை உடைபடும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.  நீர் போக்கின் தன்மைக்கு ஏற்ப, தொலைநோக்குப் பார்வையின் பயனால் புதிய பாலம் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டது. அதனால் இடிபாடுகள் பாலத்துக்கு ஆபத்தின்றி வெள்ள நீரில் சென்றதால் புதிய பாலம் தப்பியது.
இதில் மற்றொரு  பார்வையும் உண்டு.  அதாவது கடந்த கால கட்டடங்களைப்போல தற்போதைய கட்டடங்கள், பாலங்கள் இருப்பதில்லை என்ற புகார்களும் உள்ளன. அந்த வகையில் இந்தப் புதிய பாலமும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாலத்தை மேற்கு திசையில் கட்டினார்களா என்ற சந்தேகமும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 எது எப்படியோ புதிய பாலம் தப்பியது. இல்லையேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.