ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

மூதாட்டியை மிரட்டி 55 பவுன் நகை, ரூ. 1 லட்சம் கொள்ளை

திருச்சி பொன்மலைப் பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனபால் மனைவி பிரேமாவதி (65). கடந்த ஆக. 17ஆம் தேதி மாலை

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:17 am IST

திருச்சி பொன்மலைப் பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனபால் மனைவி பிரேமாவதி (65). கடந்த ஆக. 17ஆம் தேதி மாலை அவர் வீட்டில் தனியாக  இருந்தபோது கூரியர் நிறுவனத்தில் இருந்து வருவதாகக் கூறி 3 இளைஞர்கள் வீட்டிற்குள் வந்தனர். அப்போது திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 55 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.  இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர். 
ரூ. 75,000 திருட்டு : திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர்  மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ஜே. லியோன் வினோத்குமார். இவர் வெள்ளிக்கிழமை மாலை  திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள உணவு விடுதியின் முன்  தனது காரை நிறுத்தி உள்ளே சென்று உணவருந்திவிட்டு வந்து பார்த்தபோது காரின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பையில் இருந்த ரூ. 75,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.