மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அடுத்தடுத்த வீடுகளில் 10 பவுன் நகை திருட்டு    

துறையூர் அருகே பகளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் சரவணன்(34). உணவகத் தொழிலாளி. இவர், திங்கள்கிழமை காலை வேலைக்கு சென்றார். 

Updated On :25 டிசம்பர் 2018, 9:52 am IST

துறையூர் அருகே பகளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் சரவணன்(34). உணவகத் தொழிலாளி. இவர், திங்கள்கிழமை காலை வேலைக்கு சென்றார். 
இவருடைய மனைவி நூறு நாள் வேலைக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகைகள், ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனராம். இதேபோல், இவருடைய வீட்டருகே வசிக்கும் காளையன் மகன் சுக்குரு(65) என்பவர் தனது மகள் கோமதியை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சுக்குரு தனது மகளின் மகப்பேறு செலவுக்காக வீட்டில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. புகார்களின் பேரில், துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
பைக் திருட்டு
துறையூர் புதிய சாமிநாதன் நகரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் அரவிந்தராஜ். சென்னையில் பணி செய்யும் இவர், தனக்குச் சொந்தமான மோட்டார்  சைக்கிளை 2 மாதங்களாக துறையூரில் உள்ள தனது தந்தை வீட்டில் நிறுத்தியிருந்தார். 
இந்நிலையில், அரவிந்தராஜ் தந்தை சனிக்கிழமை (டிச. 22) காலை எழுந்து பார்த்தபோது, தனது மகனின் இரு சக்கர வாகனம் காணாதது குறித்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.