மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் கேபிள் டிவி கட்டணம் பலமடங்கும்

Updated On :25 டிசம்பர் 2018, 9:49 am IST

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் கேபிள் டிவி கட்டணம் பலமடங்கும் உயரும் அபாயம் இருப்பதாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் பி. விஷ்ணுவர்த்தன் தலைமை வகித்தார். 
இதில், மாநில துணைத் தலைவர் ஜி. தாமோதரன் பேசியது: தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள டிஜிட்டலாக்கம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அதற்கு முன்பாகவே தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அலகார்ட் முறையை 2019 ஜனவரி முதல் அமல்படுத்தவுள்ளது. 
மக்கள் விரும்பும் சேனல்களை விரும்பிய கட்டணத்தில் பார்ப்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், தமிழகத்தில் அதற்கான அடித்தளம் இதுவரை முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. தற்போது 300-க்கும் மேற்பட்ட சேனல்களை அதிகபட்சம் ரூ.180 மாதக் கட்டணத்தில் கண்டுகளிக்கும் சூழல் உள்ளது. 
டிஜிட்டலாக்கம் அமல்படுத்துவதற்கு முன்பாகவே அவசர கதியில் கொண்டுவரப்படும் அலகார்ட் முறையால் அதே 300 சேனல்களை பார்க்க வேண்டுமெனில் கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவரும் மாதம் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். இதுமட்டுல்லாது இந்த கட்டணத்துக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியாக ரூ.144 (18 சதவீதம்) செலுத்த வேண்டும். மாதம் ஒன்றுக்கு மொத்தமாக கேபிள் இணைப்புக்கு ரூ.944 செலுத்த வேண்டிய நிலை உருவாகும். 
இது பொதுமக்களுக்கு மட்டுமில்லாது கேபிள் தொழில் நடத்தும் ஆபரேட்டர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அலகார்ட் முறையில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், சங்க மாவட்டத் தலைவர் பி. நாகராஜ், மாவட்ட பொருளாளர் ஜி. வெங்கடேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தொழிலை புனரமைக்க தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 
முத்ரா வங்கி கடன் திட்டத்தின் கீழ் 50 மானியத்தில் தலா ரூ.2 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், திருச்சி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், திருவரங்கம், மணப்பாறை, தொட்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.