பெரியார் , எம்.ஜிஆர். நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள அவர்களது சிலைகளுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக : கண்டோன்மென்ட் நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்பிரமணியம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையிலும், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் தலைமையிலும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் சிலைக்கு... : மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, தி.க. சார்பில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் கட்சியினரும் பெரியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் நிர்வாகிகள், மாணவ, மாணவிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அதிமுக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முசிறி: அதிமுக சார்பில் பேரூர் கழக செயலர் சுப்பிரமணியன் தலைமையில் முன்னால் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேல் முன்னிலையில் அதிமுகவினர் முசிறி கைகாட்டியில் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் முசிறி கைகாட்டியில் நகரச் செயலாளர் பேங்க் ராமசாமி தலைமையில் அக்கட்சியினர் எம்ஜிஆர் படத்துக்கு மரியாதை செய்தனர். தொட்டித்தில் வாணப்பட்டரை மைதானத்தில் ஒன்றியச் செயலாளர் பால்மணி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பையில் விடிய விடிய மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை முடங்கியது

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

பட்டியல் பிரிவு ஆணையம் முன் மத்திய இணையமைச்சா் ஆஜா்

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


