திருச்சி மாவட்டம், மணப்பாறை அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் மார்கழி திருவிழாவில் பால்குட உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய மார்கழி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை கணபதி ஹோமமும், ஞாயிற்றுக்கிழமை பால்குட உற்ஸவமும் நடைபெற்றது.
இதையொட்டி அருள்மிகு ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் திருக்கோயிலிலிருந்து பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ். வீரமணி, சின்ன நாட்டாமை மோகன், மற்றும் ஊர் பெருமக்கள் சார்பாக கோவில் பால்குடம் முன்னே செல்ல, அதைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடங்கள் ராஜவீதிகள் வழியாக சென்று ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிசேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கரகம்பாலித்தல் இரவு நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை கோயில் முன்பு பொங்கல், மாவிளக்கு வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து அக்னிசட்டி எடுத்து, அலகுகுத்தி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வே.பிரபாகர், ஒப்பந்ததாரர் எஸ். சண்முகம்,ஜெ.விஜயபாஸ்கர், எஸ்.சொக்கப்பன், மு.ம.அரவிந்த், கிளாஸிக் நண்பர்கள், காளியம்மன் கோயில் விழாக் குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்!

ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


