சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மணப்பாறை காளியம்மன் கோயிலில் பால்குட உற்ஸவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் மார்கழி திருவிழாவில் பால்குட உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :31 டிசம்பர் 2018, 9:53 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் மார்கழி திருவிழாவில் பால்குட உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய மார்கழி திருவிழாவையொட்டி,  சனிக்கிழமை கணபதி ஹோமமும், ஞாயிற்றுக்கிழமை பால்குட உற்ஸவமும் நடைபெற்றது.
இதையொட்டி அருள்மிகு ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் திருக்கோயிலிலிருந்து பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ். வீரமணி, சின்ன நாட்டாமை மோகன், மற்றும் ஊர் பெருமக்கள் சார்பாக கோவில் பால்குடம் முன்னே செல்ல, அதைத் தொடர்ந்து  பக்தர்கள் பால்குடங்கள் ராஜவீதிகள் வழியாக சென்று ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிசேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கரகம்பாலித்தல் இரவு நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை கோயில் முன்பு பொங்கல், மாவிளக்கு வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும்.  அதைத் தொடர்ந்து அக்னிசட்டி எடுத்து, அலகுகுத்தி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.  இந்து சமய அறநிலையத்துறை செயல்  அலுவலர் வே.பிரபாகர், ஒப்பந்ததாரர் எஸ். சண்முகம்,ஜெ.விஜயபாஸ்கர், எஸ்.சொக்கப்பன், மு.ம.அரவிந்த், கிளாஸிக் நண்பர்கள், காளியம்மன் கோயில் விழாக் குழுவினர்  ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.