எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

செல்லிடப்பேசி கடை உரிமையாளர் வீட்டில் ரூ.40,000 திருட்டு

செல்லிடப்பேசி கடை உரிமையாளர் வீட்டில், ரூ. 40,000 , பொருள்களைத் திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:48 am IST

செல்லிடப்பேசி கடை உரிமையாளர் வீட்டில், ரூ. 40,000 , பொருள்களைத் திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பணையக்குறிச்சி ஏ.ஆர்.கே. நகர் 
2 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் (30). 
சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் செல்லிடப்பேசி விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். 
கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற அவர் சனிக்கிழமை இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 
வீட்டினுள் சென்று பார்தபோது பீரோவிலிருந்த ரொக்கம் ரூ.40,000 மற்றும் சில பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.