தமிழகத்தில் தண்ணீரைச் சேமிக்க அதி நவீன தொழில்நுட்பத் திட்டம் தேவைப்படுகிறது என்றார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ், பாரதப் பெருந்தலைவர் காமராஜர்பேரவை சார்பில் நடைபெற்ற 21 ஆம் ஆண்டு தொடக்க விழா, கல்வி நிதியுதவி வழங்குதல் மற்றும் காமராஜரின் 116 ஆம் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 15 லட்சம் முதல் 20 லட்சம் ஏக்கர் வரை டெல்டா மாவட்டங்களில் சம்பாசாகுபடி பணிகள் நடைபெற உள்ள நிலையில், விவசாயத்துக்குத் தேவையான விதைநெல், உரங்கள், பூச்சிமருந்து போன்றவற்றை தட்டுப்பாடில்லாமல் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பாசனத்துக்காகத் திறக்கப்படும் தண்ணீரைச் சேமித்து வைக்கும்வகையில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தேவையான அளவுக்குத் தடுப்பணைகளை அரசு கட்ட வேண்டும்.
காமராஜர் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர், தமிழகத்தில் பாசன மேலாண்மைக்கான திட்டங்கள் எந்தவித ஆட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குகொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நீர்ப்பாசன மேலாண்மைத் திட்டங்கள் தேவைப்படுகின்றன என்றார் வாசன்.
தொடர்ந்து நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசிய ஜி.கே.வாசன், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கினார்.
விழாவுக்கு, பாரதப் பெருந்தலைவர் காமராஜர் பேரவை நிறுவனத் தலைவர் வே.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் திருச்சி மாநகர் நந்தா கே.செந்தில்வேல், தெற்கு டி.குணா, வடக்கு கே.வி.ஜி. ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், த.மா.கா. மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.தர்மராஜ், விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன், மாநில கொள்கைபரப்புச் செயலர் இண்டர்நெட் என்.ரவி, மதிவாணன், மாவட்ட பொருளாளர் கே. டி. தனபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னதாக, பேரவையின் செயலர் டி. நாகராஜன் வரவேற்றார். நிறைவில் வடிவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


