இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திருச்சி-சென்னை இடையே ஏர் அலையன்ஸ் விமான சேவை தொடக்கம்

திருச்சி-சென்னை இடையே சனிக்கிழமை மட்டும் கூடுதல் விமான சேவையைத்  தொடங்கியுள்ளது ஏர் அலையன்ஸ் விமான நிறுவனம்.

Updated On :23 ஜூலை 2018, 8:46 am IST

திருச்சி-சென்னை இடையே சனிக்கிழமை மட்டும் கூடுதல் விமான சேவையைத்  தொடங்கியுள்ளது ஏர் அலையன்ஸ் விமான நிறுவனம்.
திருச்சி - சென்னை இடையே,  ஏர் அலையன்ஸ், ஜெட், இண்டிகோ என மொத்தம் 3 விமான நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன.  இதில், ஏர் அலையன்ஸ் தினசரி  ஒரு சேவையும்,  ஜெட் இரு சேவைகளையும், இண்டிகோ 4 சேவைகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர் அலையன்ஸ் நிறுவனம் சனிக்கிழமை மட்டும் கூடுதலாக ஒரு சேவையை தொடங்க திட்டமிட்டு  சனிக்கிழமை (ஜூலை 21) முதல்  தொடங்கியுள்ளது. அந்த வகையில் இரவு 7.45க்கு திருச்சி வரும்  ஏர் அலையன்ஸ் விமானம் 8.30-க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 9.25க்கு சென்னையை  சென்றடைகிறது.  முன்னதாக தினசரி காலை 8.15-க்கு திருச்சி வரும் விமானம் 8.40-க்கு சென்னையை சென்றடைகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.