போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குழந்தை கடத்த வந்தவர்கள் எனக் கருதி 2 பேர் போலீஸில் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தில் மாந்திரீகம், ராசிக்கல், தாயத்து விற்பனை செய்வதாகக் கூறி இருவர் சுற்றி வந்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தில் மாந்திரீகம், ராசிக்கல், தாயத்து விற்பனை செய்வதாகக் கூறி இருவர் சுற்றி வந்துள்ளனர். இதில் கீழ ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பகவதி என்ற பெண்ணிடம், தீயசக்திகள் ஆபத்து இருப்பதாகக் கூறி ராசிக்கல் மோதிரம், தாயத்தை ரூ.3 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர்.
அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து சுற்றித் திரிந்ததால் சந்தேகமடைந்த கிராம மக்கள், இருவரிடம் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்களை குழந்தை கடத்த வந்தவர்கள் எனக் கருதிய கிராம மக்கள், இருவரையும் தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மதுரை மாவட்டம், சத்தியமங்கலம் அன்னை சத்யா நகரில் வசித்து வரும் முகமது இக்பால் மகன் சதாம் உசேன்(29), ஷாஜகான் மகன் சிக்கந்தர்(28) என்பதும், ராசிக்கல் மோதிரம், தாயத்து விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்தனர். புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீஸார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.