போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கொலையான இளைஞரின் சடலத்தை காதலி வீட்டில் வைக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி அருகே  கொலையான இளைஞரின் சடலத்தை, காதலியின் வீட்டில் வைக்க திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி போலீஸாரின் பேச்சைத் தொடர்ந்து கைவிடப்பட்டது .

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

திருச்சி அருகே  கொலையான இளைஞரின் சடலத்தை, காதலியின் வீட்டில் வைக்க திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி போலீஸாரின் பேச்சைத் தொடர்ந்து கைவிடப்பட்டது .
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் அருகே கணவனூரைச் சேர்ந்த நடராஜன் மகன் விஜய் (18).  பிளஸ் 2 படித்துவிட்டு திருச்சி ரயில்நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.  பழூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், விஜய்க்கிடையே காதல் இருந்து வந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனை மீறி அவ்வப்போது காதலியை, விஜய் சந்தித்து வந்தார். 
இதையடுத்து, பெண்ணின் சகோதரன் விஸ்வா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் விஜய்யை கண்டித்தும், கேட்கவில்லையாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, பழூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய விஜய்யை, விஸ்வா, அவரது நண்பர்கள் வழி மறித்து கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் உயிரிழந்தார். திங்கள்கிழமை அவரது பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கொலையாளிகளை கைது செய்யும் வரை விஜய்யின் சடலத்தை காதலியின் வீட்டில் வைக்க முடிவு செய்த அவரது நண்பர்கள், உறவினர்கள் பழூருக்கு எடுத்துச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ஊர் முக்கியஸ்தர்கள் பழுர் பிரிவுசாலை அருகே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய்யின் சடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் பழூர், கணவனூரில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.