சிறுபான்மையினத்தவருக்கான கல்வி உதவித்தொகை பெற தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் கல்வி பயின்று வரும் சிறுபான்மை இன சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, மத்திய அரசு, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நிகழாண்டில் இக்கல்வி உதவித்தொகையை பெற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது பதிவுகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள், ஜ்ஜ்ஜ்.ஹண்ள்ட்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்
என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவுகளை செய்து கொள்வதுடன், ஏற்கெனவே பதிவு செய்தவர்களும் தங்களது பதிவுகளையும் பயனீட்டாளர் குறியீடுகளையும் ( யூசர் ஐடி) சரிபார்த்துக்கொள்ளலாம். பதிவு செய்வதில் வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள, மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை தொடர்புகொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.