/

லாரி மோதியதில் பள்ளி மாணவர் சாவு

முசிறி அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:26 am

DIN

முசிறி அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
சமயபுரம் அம்பலக்காரர்  தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சபரீஷ் (10).  சமயபுரத்திலுள்ள பள்ளியொன்றில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இவர்  தனது மாமா சிவக்குமாருடன் புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில், அய்யம்பாளையத்திலிருந்து சமயபுரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது  கரூரிலிருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கிச் சென்ற லாரி  இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சபரீஷ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த முசிறி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சபரீஷின் உடலைக் கைப்பற்றினர். விபத்துக்கு காரணமான கடலூர் மாவட்டம், மலுவதேரி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான  ம. இளவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.