"அரியமங்கலம் குப்பைக் கிடங்கு மூடப்படும்'
திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் குப்பைக்கிடங்கு மூடப்படும் என ஆணையர் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் குப்பைக்கிடங்கு மூடப்படும் என ஆணையர் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
மத்திய அரசின் கள விளம்பரத்துறை, தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திருச்சி மாநகராட்சி ஆகியவை இணைந்து தூய்மை இந்தியா, தூய்மை நகரக் கணக்கெடுப்பு-2018 விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தின. இதன்தொடக்கமாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மேலரண்சாலையில் தொடங்கி நகரைச் சுற்றி வந்து தேவர்ஹாலை அடைந்தது. தொடர்ந்து, நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் தூய்மைப் பணியில் முதலிடத்தை நோக்கி எனும் குறும்படம் ஒளிபரப்பானது. விழாவுக்கு, தலைமை வகித்தும், பேரணியை தொடக்கி வைத்தும் மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் பேசியது: மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தாண்டு முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிப்பதில் பிற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக திருச்சி மாநகராட்சி உள்ளது. மக்கும் குப்பைகளை ஒரே இடத்தில் சேகரித்து வைக்காமல் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் வகையில் 23 இடங்களில் உர செயலாக்க மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரியமங்கலத்தில் உள்ள குப்பைக்கிடங்கு மூடப்பட வேண்டும். கிடங்கில் குப்பைகளை சேகரிக்கும் வழக்கமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். மக்கும் குப்பையை உரமாகவும், மக்காத குப்பைகளை சுகாதாரமுறையில் அகற்றி பணமாகவும் மாற்றி பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். சுவீடன் நாட்டில் இயங்கும் பேருந்துகள் முழுவதும், புதைசாக்கடை திட்டத்தில் உள்ள கழிவுகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் எரிவாயுவில்தான் இயங்குகின்றன. மாநகராட்சியின் தூய்மை பணிக்கு மாணவர்களே தூய்மைத்தூதர்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மத்திய அரசின் கள விளம்பர அலுவலர் கி. தேவிபத்மநாபன், மாநகராட்சி நகரப் பொறியாளர் எஸ். அமுதவள்ளி, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கே. சுப்ரமணியன், கள உதவியாளர்கள் எஸ்.ஆர். சந்திரசேகரன், க. ரவிந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...