ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருவானைக்கா சங்கர மடத்தில் ஸ்ரீ ஜயேந்திரருக்கு புஷ்பாஞ்சலி

உடல் நலக்குறைவால் புதன்கிழமை சித்தியடைந்த காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் திருவுருவப் படத்துக்கு திருவானைக்கா சங்கர மடத்தில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:24 am

DIN

உடல் நலக்குறைவால் புதன்கிழமை சித்தியடைந்த காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் திருவுருவப் படத்துக்கு திருவானைக்கா சங்கர மடத்தில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவானைக்கா பகுதியிலுள்ள ருக் வேதப்பாடச்சாலையில்  1950 ஆம் ஆண்டு தங்கி சிறிது காலம்  ருக் வேதம் பயின்றவர்  காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமி.   அப்போது திருவானைக்கா வடக்குத் தெருவிலுள்ள காஞ்சி சங்கர மடத்தில் அவர் தங்கியிருந்தார்.  திருவானைக்கா பகுதி மீது ஜயேந்திரருக்கு அளவற்று பற்று உண்டு.
புதன்கிழமை காலை ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்த தகவலையறிந்து, அப்பகுதியினர் அவரது படத்துக்குபுஷ்பாஞ்சலி செலுத்தினர். மாலையில் சங்கர மடத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலியுடன் சகஸ்ர நாம பாராயணமும் செய்தனர்.
இதுபோல,  ஹிந்து சமய மன்றம் சார்பில்  ஸ்ரீரங்கம் வடக்குச் சித்திரை வீதியிலிருந்து ஜயேந்திரர் உருவப்படத்துடன் அவரது பக்தர்கள் மௌன ஊர்வலம் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.