திருச்சியில் இளம்பெண் ஒருவர் திருமணத்துக்கு பார்த்த வரன் பிடிக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி கே.கே. நகர் சாலை சிம்கோ மீட்டர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ராமு மகள் வசுமதி (28). சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்தார். நீண்ட காலமாக மணமகன் தேடியும் அவருக்கு சரியான வரன் அமையவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த அவரிடம் வரன் பார்த்த விவரத்தை பெற்றோர் கூறியுள்ளனர். மணமகன் மற்றும் அவரது பணி உள்ளிட்டவை வசுமதிக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியில் இருந்த அவர் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் எ.புதூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், வசுமதி, தனக்கு சரியான வரன் அமையாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு! விஜய் படத்துடன் பாடலைப் பகிர்ந்த இளையராஜா!

வெயிலை சமாளிக்க 3 வேளை குளியல்! மறுவாழ்வு மையத்தில் யானைகள் குளுகுளு! | Trichy

அணுசக்திக் கழகத்தில் பாராமெடிக்கல் பணிகள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

