திருச்சி மாவட்ட ஆட்சியரக சாலையில் அமைந்துள்ள என். கோபால்தாஸ் ஜூவல்லர்ஸில் நடைபெற்று வரும் வைரநகை விற்பனை மேளா செவ்வாய்க்கிழமை (மே 22) நிறைவடைகிறது.
திருச்சி தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர். ராமசுப்பு, விற்பனையைத் தொடங்கி வைத்து புதிய வைர நகையை, டால்மியா சிமெண்ட்ஸ் செயல் இயக்குநர் கிருஷ்ணகுமார், யுகா சமூக அமைப்பின் தலைவர் அல்லிராணி ஆகியோருடன் சேர்ந்து அறிமுகம் செய்து வைத்தார்.
வைரநகை மேளா குறித்து என். கோபால்தாஸ் ஜூவல்லர்ஸின் தலைவர் தில்ஜித்ஷா கூறியது:
திருச்சி சின்னக்கடை வீதியை தலைமையிடமாகக் கொண்டு, வைர நகை விற்பனையில் 89 ஆண்டுகள் புகழ்பெற்ற எங்கள் நிறுவனம் சென்னை, ஹைதராபாத், மும்பை, துபை, அபுதாபி ஆகிய இடங்களிலும் இயங்கி வருகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியரகச் சாலையில், வைர நகைகளுக்கென்றே அமைந்துள்ள பிரத்யேக ஷோரூமில் நடைபெறும் இந்த மேளாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வைர நகை என்ற முறையில் ஆயிரக்கணக்கான புதுப்புது டிசைன்களில் வைரநகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதில், வைர பென்டன்ட், தோடு கலெக்சனில் தொடங்கி வைர நெக்லஸ் கலெக்சன், ஜெம் ஸ்டோன்ஸ் கலெக்சன், வளையல் கலெக்சன் மற்றும் வைர மோதிர கலெக்சன் வரை நடைபெறும் இந்த மேளா செவ்வாய்க்கிழமை (மே 22ஆம் தேதி) நிறைவடைகிறது. வாடிக்கையாளர்கள் இந்த மேளாவை பயன்படுத்தி வைர நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றார் தில்ஜித்ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

