திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முக்கொம்பு அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

கோவையைச் சேர்ந்தவர் விஜயராகவன்  மகன் வெங்கடேசன் (19), கோவை பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் பட்ட மாணவர்.

Updated On :21 மே 2018, 2:05 am

கோவையைச் சேர்ந்தவர் விஜயராகவன்  மகன் வெங்கடேசன் (19), கோவை பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் பட்ட மாணவர்.
கோடை விடுமுறையையொட்டி இவரும், இவரது சகோதரர் கார்த்திக்கும் (15)   திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள சித்தி வீட்டுக்கு கடந்த வாரம் வந்தனர். ஞாயிற்றுக்கிழமை பகல், சித்தி மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து 3 பேரும்,  காவிரியாற்றில் உள்ள முக்கொம்பு அணைக்குச் சென்றனர்.  
மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழம் அதிகமான பகுதிக்கு சென்ற வெங்கடேசன் மூழ்கினார்.  இதையடுத்து அங்கிருந்தோர் வெங்கடேசனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.