தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து திருவெறும்பூர் பெல்நிறுவனத்தின் முன் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் திடீர் மோதல் ஏற்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து பெல் நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வியாழக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும், தொமுச பொதுச் செயலருமான எத்திராஜ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய நிர்வாகிகள் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை தரக்குறைவாக பேசுவதாகக் குறித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம் செய்தனர்.இதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் தங்களது கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குறித்து பேசும்போது தாக்கி பேசியது ஏன் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அண்ணா தொழிற்சங்கத்தினர் ஒரு பிரிவினராகவும், இதர அனைத்து தொழிற்சங்கத்தினரும் மற்றொரு பிரிவாகவும் பிரிந்து வாக்குவாதம் செய்ததுடன், மோதலில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் தள்ளு, முள்ளுவிலும் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் தலையிட்டு இருதரப்பையும் சமரசம் செய்து ஆர்ப்பாட்டத்தை அமைதியாக நடத்துமாறு அறிவுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







