துபையிலிருந்து சாவியாக வடிவமைத்து கடத்தி வரப்பட்ட 300 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து வியாழக்கிழமை மாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் சில பூட்டுக்களும், அவற்றுடன் ஏராளமான சாவிகளையும் கொண்டு வந்திருந்தார். அவற்றில் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சோதனை மேற்கொண்டதில் தங்கத்தால் செய்யப்பட்ட சாவிகள் என்பதும், அதில் பித்தளை முலாம் பூசி எடுத்து வந்ததும் தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 9.50 லட்சமாகும். அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்து அமைச்சர் வினோத் பதில்

ரயில் மறியல் முயற்சி 20க்கும் மேற்பட்டோர் கைது! | CBE

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!

சிவகங்கையில் நெய் வியாபாரி கொலை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


