தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

சிவகங்கையில் நெய் வியாபாரி கொலை!

நெய் வியாபாரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து...

News image

நெய் வியாபாரி ரஜினி. - படம்: தினமணி

Updated On :26 ஜூலை 2026, 1:14 pm IST

சிவகங்கை: சிவகங்கை அருகே அண்ணாமலை நகர் பகுதியில் நெய் வியாபாரி நேற்று(ஜூலை 25) நள்ளிரவில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வி. புதுக்குளத்தை சேர்ந்தவர் ரஜினி (35). நெய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து இளையான்குடி சாலை செல்லும் வழியில் உள்ள அண்ணாமலை நகரில் உள்ள தைல மரங்கள் உள்ள வனப்பகுதியில் கழுத்தறுத்து இறந்து கிடந்தார்.

இது குறித்து அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை சிவகங்கை நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரஜினியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரஜினிக்கு சரண்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் அண்ணாமலை நகர் பகுதியில் நெய் வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலை நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை நடந்திருக்கலாம் என்பதால் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமா? அல்லது முன்விரோதம் எதுவும் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்கிற சந்தேகங்களின் அடிப்படையில் போலீஸார் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

The police are investigating the murder of a ghee merchant whose throat was slit late last night (July 25) in the Annamalai Nagar area near Sivaganga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.