பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் திருச்சியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி, தென்னூரை அடுத்த சேஷசாயிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ரத்தினவள்ளி. இவர்களது மகள் விஜயலட்சுமி (16). 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். கணவர் இறந்த பிறகு, வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த ரத்தினவள்ளி, தனது மகளை படிப்பில் கவனம் செலுத்தவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என ஊக்குவித்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 500-க்கு 446 மதிப்பெண் பெற்றிருந்தார். இதையடுத்து தனது தாய் எதிர்பார்த்தபடி அதிக மதிப்பெண் பெறவில்லையே என்ற விரக்தியில் இருந்த விஜயலட்சுமி, புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







