/

போனஸ் வழங்காததைக் கண்டித்து பெல் நிறுவன வெல்டிங் பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போனஸ் வழங்காததைக் கண்டித்து பெல் நிறுவன வெல்டிங் பிரிவு தொழிலாளர் கூட்டடைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 9:16 am IST

போனஸ் வழங்காததைக் கண்டித்து பெல் நிறுவன வெல்டிங் பிரிவு தொழிலாளர் கூட்டடைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி, பெல் நிறுவனத்தில் வெல்டர் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதியம், பதவி உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலர் போராட்டத்தை புறக்கணித்து பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இத்தொழிலாளர்களுக்கு மட்டும் தீபாவளி போனஸ் அறிவிக்கவில்லை. பெல் நிர்வாகத்தின் இந்த செயலைக் கண்டித்து  பெல் பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச தொழிற்சங்க துணைத் தலைவரும், தொழிற் சங்கங்களின் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான சேகர் தலைமை வகித்தார். இதில், தொமுச, அம்பேத்கர் யூனியன், ஏடிபி, பிஎம்ஸ், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.