சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் நிலை மாறி மீண்டும் பழைய முறை செயல்படுத்தப்பட வேண்டுமென திருச்சியில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுக்குள் மற்றும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற ஐதீக முறை நடைமுறையில் இருந்து வந்தது. அது தொடர்பாக, சிலர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், அனைத்துப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நாடு முழுவதிலும் உள்ள ஆன்மிகவாதிகள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கேரளத்தில் மகளிர் அமைப்புகள் தாமாக முன்வந்து நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி பேரணி நடத்தி வருகின்றன.
திருச்சியில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அறவழியில், ஆன்மிக முறைப்படி கூட்டுப் பிரார்த்தனை நடத்தி பழை நிலை தொடர வழிகாட்ட வேண்டும் என இறைவனுக்கு வேண்டுதல் விடுக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி சிந்தாமணி சிதம்பரம் பிள்ளை மஹாலில் நடைபெற்ற சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையை ஐயப்ப சேவா சங்க புத்தூர் கிளைச் செயலாளரும், குருசாமியுமான ஆர்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பூஜையுடன் தொடங்கி வைத்தார். ஐயப்ப சேவா சங்க மாவட்டத் தலைவர் என்.ரமேஷ், செயலாளர் எம். ஸ்ரீதர், பொருளாளர் ஜெ.சுரேஷ், மண்டல நிர்வாகிகள் இளங்கோ, ராஜகோபால், முத்து, ஆறுமுகம், புத்தூர் கிளைத் தலைவர் அழகப்பன், பொருளாளர் வி.ஜெகன்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எல்லா வல்ல இறைவனிடம் பழைய நடைமுறையே பின்பற்றும் வகையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைவரது சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு

முதல்வர் விஜய் தில்லி பயணம்!

வெள்ளியங்கிரி மலையேற்றம்: இன்று முதல் தற்காலிக நிறுத்தம்!

கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
